மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு! முழு விபரம் உள்ளே!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 உயிரிழப்புகள் நேற்று இரவு பதிவு செய்யப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுவரை நாட்டில் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளில் நேற்றைய தினமே அதிகளவான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 2 ஐச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் நியுமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையே  இவரது உயிரிழப்புக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரும், தெமட்டகொட பகுதியச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரும், 72 வயதுடைய ஆண் ஒருவரும்  தமது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொழும்பு 13 ஐச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரும் தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே இவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஹோமாகம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 76 வயதுடைய பெண்ணொருவர்  கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 491 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில்   487 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனையவர்களில் இத்தாலியில் இருந்து வருகைத்தந்த மூவருக்கும் துருக்கியில் இருந்து வருகைத்தந்த ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 98 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 829 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 224 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை  அரலகங்வில பொலிஸ் நிலைய உப பொலிஸ்  பரிசோதகர் ஒருவருக்கு கொரானா தொற்று  ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் W K W S  குமாரவங்ச இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பணியாற்றும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுக்குள்ளான உப பொலிஸ்  பரிசோதகருடன் தொடர்புடைய 14 குடும்பங்களைச்  சேர்ந்த   53 பேர்  இன்று  பி சி ஆர் பரிசோதனைகளுக்கு ட்படுத்தப்படவுள்ளதாகவும்  பொலன்னறுவை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளைகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைகொழும்புரிமான்ட் சிறைச்சாலைஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைபோகம்பரை சிறைச்சாலை மற்றும் பூஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளைச் சேர்ந்த 629பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்,    இதுவரையான காலப்பகுதியில் கொரோனா  தொற்றில் இருந்து குணமடைந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 200 அதிகரித்துள்ளதாக கொரோனாத் தொற்றை தடுப்பதற்கானதேசிய செயலணி மேலும்  குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 629  ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா  தொற்றுக்குள்ளான 74 பேர் அடையாளங் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு  ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  குருவிட்ட சிறைச்சாலையில் கொரோனா  தொற்றுக்குள்ளான 15 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

பெண்கைதிகள் 13 பேர் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே குருவிட்ட சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் முன்னதாக  அடையாளங் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன நாளை முதல் (07) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது...

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

Developed by: SEOGlitz