மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

- Advertisement -

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து வங்கி நடவடிக்கைகளை தடையின்றி  முன்னெடுப்பதற்கு அவசர பணிக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்தியவங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுப்பார்கள் என மத்திய வங்கயின் தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மத்திய வங்கி ஊழியர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மத்திய வங்கியின்  அத்தியாவசியமான தொழிற்பாடுகள் யாவும் வழமை போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் மத்திய  வங்கிவிடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா – கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

அமெரிக்காவில் நேற்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1 இலட்சத்து எண்ணாயிரத்து 63 க்கும் மேற்பட்டோர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் 1 கோடியே 32 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும்...

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

Developed by: SEOGlitz