மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் தொற்றுப்பரவல் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

- Advertisement -

மேல்மாகாணத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வியடத்தினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினது செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா தொற்றுத் தொடர்பான முழுமையான தகவல்களையும் வழங்க வேண்டும். இல்லையெனில் மேல்மாகாணத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்ற எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

மேல் மாகாணம் மிகவும் ஆபத்தான பகுதியாக இருப்பதால், கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான தரவுகள் உடனடியாகச் சேகரிக்கப்பட வேண்டும்.

மேல் மாகாணத்திற்கென விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்றாளர்கள் குறித்த தனிப்பட்ட விபரங்களும் தாமதமின்றிச் சேகரிக்கப்பட வேண்டும்.

இது நோயாளர்களுக்கான சிகிச்சைகளை தாமதமின்றி வழங்குவதற்கு வழி ஏற்படுத்துவதுடன், புதிய தொற்றாளர்களை உடனடியாக அறிந்து கொள்வதற்கு இலசுவாக இருக்கும்.

இதுவரை கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான எந்தவொரு தரவுகளும் மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் சேகரிக்கப்படவில்லை. இது மேலும் ஆபத்தான நிலைமைக்கே வழிவகுக்கும்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினது செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Developed by: SEOGlitz