மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் மாவீரர் தின நிகழ்வுகளுக்குத்தடை!

- Advertisement -

மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பாக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை வரும் 24ஆம் திகதி செவ்வாய்கிழமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று மன்றில் முன்னிலையாகாத பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை வழங்கவும் நீதிமன்று உத்தரவிட்டது.

- Advertisement -

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்தலை நடத்தவுதற்கு தடை கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 38 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றில் இந்த தடை உத்தரவு இன்றையதினம் பிறப்பிக்கப்பட்டுள்ள தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, மாங்குளம், மல்லாவி ஆகிய 5 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறித்த தடை உத்தரவுகளை பெற்றுள்ளனர்.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அத்தோடு குறித்த ஐந்து பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழு தலைவர் உள்ளிட்ட 41 பேருக்கு தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் விசேட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு, உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித பாரபட்சமும் இன்றி...

Developed by: SEOGlitz