மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை ஒருபோதும் முடக்கவில்லை : பிரதமர் மஹிந்த!

- Advertisement -

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை ஒருபோதும் முடக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மெனிங் சந்தை வளாகத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், இக்கட்டான சூழ்நிலைகளின் போதும் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசாங்கம் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாவிட்டால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பார்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு நகரில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையிலே தமது முன்னைய ஆட்சியில் பேலியகொடை மெனிங் சந்தை வளாகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இதன் செயற்பாடுகளை தாமதப்படுத்தி இருக்காவிட்டால் பேலியகொடை மெனிங் சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வெகு காலமாகியிருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை, வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் அனைத்துடனும் பேலியகொடை பிரதேசம் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேலியகொடை மெனிங் சந்தைக்கான சரக்குப் போக்குவரத்தை  இலகுவாக நாடு முழுவதும் மேற்கொள்வதற்கு இது ஒரு மையமாக விளங்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz