மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்ய தயார் : அமைச்சர் நாமல்!

- Advertisement -

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மருந்தை, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில், இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

“கொரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எந்த தீர்மானத்தையும் வெளியிடவில்லை. அத்துடன் உலக நாடுகள் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானங்களுக்கும் வரவில்லை.

இவ்வாறு நாடுகள் முயற்சிகளை மேற்கொள்வதற்காக எமது நாட்டு மக்களை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்த முடியாது. எதிர்க்கட்சி கூறுவது குறிப்பாக எமது நாட்டு மக்களை மருந்தை பரீட்சித்து பார்ப்பதற்கு அனுமதிக்க கோருவதை போல் அமைந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை உலக சுகாதார ஸ்தாபனம் பயன்பாட்டுக்கு பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனை அடுத்த நாளே கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz