மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசியினை வழங்க அங்கீகாரத்தினைக் கோரும் Pfizer நிறுவனம்!

- Advertisement -

அவசரகாலப் பயன்பாட்டிற்காக Pfizer மற்றும் BioNTech ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியினை வழங்குவதற்குரிய அங்கீகாரத்திற்கான கோரிக்கையை  முன்வைக்கவுள்ளன.

Pfizer (பைசர்) மற்றும் BioNTech எனப்படும் ஜேர்மனிய நிறுவனம் ஆகியன இணைந்து தமது இறுதிச் சோதனை முடிவுகளை அறிவித்த சில நாட்களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (எப்.டி.ஏ) தமது  விண்ணப்பத்தினை அனுப்பியுள்ளன.

- Advertisement -

குறித்த நிறுவனங்களின் தயரிப்பான தடுப்பு மருந்து  COVID-19 ஐ தடுப்பதில்  95% பயனளிப்பதாக அறிக்கையிட்டிருந்தன.

இந்நிலையில், டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த தடுப்பு மருந்தினை கொள்வனவு செய்யும் என சர்வதேச நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு 50 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் தயாராகும் என்பதுடன்,  25 மில்லியன் மக்களைப் பாதுகாப்பதற்கு குறித்த அளவு போதுமானது என Pfizer (பைசர்) நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்!

சீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம். இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் சீனப் பெருஞ்சுவரை சில வரலாற்று ஆய்வாளர்கள் உலகின்...

நிவார் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவார் சூறாவளி, காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 213 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம்...

மேலும் சில இடங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமா திணைக்களத்தின் சமர்ப்பனத்திற்கமைய  இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில்...

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

Developed by: SEOGlitz