மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்லறையில் கண்ணீர் விடுவதற்கு கூட அரசாங்கம் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : சிவகரன்!

- Advertisement -

இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“உணர்வு பூர்வமாக தமது பிள்ளைகளுக்காக அஞ்சலி செலுத்துகின்ற ஒரு நிகழ்வாக அவர்களின் ஆத்மார்த்தமான கண்ணீரை சிந்துவதற்கான ஒரு நாளாக நவம்பர் 27 இருந்து வந்தது.

பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இலட்சியத்திற்காக மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என்கின்ற சர்வதேச நியம முறைகளுக்கு அப்பால் இவ்வருடம் நீதிமன்றங்கள் ஊடாக தடை பெறப்பட்டுள்ளது.

பொலிஸார் நீதிமன்றத்தை தவறான முறையிலே தொடர்ச்சியாகவே உபயோகித்து வருகின்றனர்.

மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் தடை உத்தரவு பெற்றிருக்கின்றார்கள். கோயிலில் கஞ்சி காய்ச்ச ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அருட்தந்தை ஒருவர் உட்பட ஐவருக்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.

என்னைத் தவிர ஏனைய நான்கு பேரும் மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்கள்.நீதிமன்றத்தின் நேரத்தையும்,நீதிமன்றத்தையும் இந்த பொலிஸார் தவறான வழிகட்டுதல் செய்கின்றனர்.

பொலிஸாரின் செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நல்லெண்ணத்தை ஏற்படுத்துகின்ற விடையத்திற்கு மாறாக இனங்களுக்கு இடையில் குரோதத்தையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தவதற்கு வழி வகுப்பதற்கு பொலிஸார் இவ்வாறான விடையங்களில் ஈடுபடுகின்றார்கள்.

ஒவ்வொறு மனங்களுக்குள்ளேயும் தமிழர்களின் என்ன பிரதிபலிப்பாக இருக்கக் கூடிய மாவீரர்கள் என்கின்ற இலட்சியக் கனவும் எண்ணமும் ஒரு போதும் பௌத்த தேசிய வாதத்தினூடாக அகற்றி விடவோ அல்லது ஒழித்து விடவோ முடியாது என்பதனை தெற்கு உணர்ந்து கொள்ள வேண்டும்” என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz