மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர் நினைவேந்தல் : யாழ். மேல் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

- Advertisement -

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

- Advertisement -

சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக குறித்த நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கோரிய குறித்த மனு யாழ் மேல்நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காட்டி எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது எனக் கோரி குறித்த மனு யுத்தத்தால் உறவுகளை இழந்த பல பெற்றோர்கள் சர்பில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா!

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின்  மூன்றாவது வாசிப்பு மீதான  மூன்றாம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...

றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய...

ஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய ஆட்சி அமையாது : ஜோ பைடன் உறுதி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மூன்றாவது ஆட்சிக்காலமாக புதிய ஆட்சி அமையாது என ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் இதனை...

Developed by: SEOGlitz