மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு கடத்துவதற்குத் தயாராக இருந்த பெருமளவு மருந்துகள் மீட்பு!

- Advertisement -

தனுஷ்கோடியில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்துவதற்குத் தயாராக இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தவிருப்பதாக மண்டபம் கடலோர காவல்படைக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  நோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய பொதி ஒன்று கைப்பற்றப்பட்டது.
குறித்த பொதியினைச் சோதனை செய்ததில் அதில் 1200 மருந்து அட்டைகளில் மொத்தமாக 6 ஆயிரம் மருந்துக் குப்பிகள் இருந்துள்ளன.

- Advertisement -

மீட்கப்பட்ட மருந்துகள்  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்துவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இங்கு இந்த மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதால் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்துவதற்கு பதுக்கி வைத்திருக்கலாம் என இந்திய உளவுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மருந்தின் பெறுமதி சுமார் 14 இலட்ச ரூபாய் என இருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  இந்திய கடலோர காவல் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு கடத்துவதற்குத் தயாராக இருந்த பெருமளவு மருந்துகள் மீட்பு! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

Developed by: SEOGlitz