மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லாட்சி வடக்கு மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? : மாயாதுன்ன கேள்வி!

- Advertisement -

கடந்த நல்லாட்சி அரசாங்கம்,  வடக்கு மக்களுக்கு என்ன விடயங்களை செய்தது என, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான, இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் வடக்குக்காக என்ன செய்தார்கள் என்பதை அந்தப் பகுதி மக்கள் மறந்துவிட்டனர்.

அப்போது அங்கு வேறு வங்கிகள் இருந்தன, நிதி காணப்பட்டது, பிரபாகரன் போன்றோர் வேறாக வாழும் வகையில் சூழலொன்றை உருவாக்கினார்கள்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட சூழலை விக்னேஸ்வரன் போன்றோர் மீண்டும் கோருகின்றனர்.

இந்த நிலையில் மக்களும் ஒருமித்து வாழக்கூடிய அமைதியான சூழலொன்றை உருவாக்குவதற்கு அன்று கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் முடிந்தது.

அதனாலேயே நாம் ஒருமித்த இலங்கைக்குள் வாழ்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz