மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த தீர்மானம் : அமைச்சர் ரோஹித!

- Advertisement -

நாட்டின் பிரதான பொருளாதார மத்திய நிலையமாக செயற்படும் கொழும்பு துறைமுகத்துக்கு பாரிய பொறுப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொழும்பு துறைமுகத்தில் துறைமுக அதிகாரசபையினால் நடத்தப்படும் ஜய கொள்கலன் முனையத்துக்கு அமைச்சர் இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தின் பணிகளை முழுமையாக முன்னெடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக முழு உலகின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் காரணமாக கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிலைமையை தவிர்ப்பதற்கும், பணியாளர்களை முறையாக நிர்வகித்து கொள்கலன் முனையத்தின் பணிகளை முன்னரைப் போலவே முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக துறைமுக நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் 24 மணிநேரமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz