மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலிருந்து கொட்டகலை சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

கொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து கடந்த 22 ஆம் திகதி குறித்த நபர் தனது வீட்டுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் பயணித்திருந்தாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபருடன் தொடர்பில் இருந்த ஏழு குடும்பங்களை சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளைப் பெறுவதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்களின் ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்த அலுவலகங்களின் ஊடாக சேவைகளைப் பெற்றுக்...

Developed by: SEOGlitz