மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபையினது வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

- Advertisement -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின், வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்றையதினம் சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

- Advertisement -

20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 உறுப்பினர்களும், எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில் ஒரு உறுப்பினர் நடுநிலமை வாகித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும், சுயேட்சை குழுவின் இரண்டு உறுப்பினர்களுமாக 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 5 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 11 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ள அதே வேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா!

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின்  மூன்றாவது வாசிப்பு மீதான  மூன்றாம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...

றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய...

Developed by: SEOGlitz