மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மன்னார் – வவுனியா நீதிமன்றங்கள் தடையுத்தரவு!

- Advertisement -

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அம்மாவட்ட நீதிமன்றங்கள் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.

இதனடிப்படையில், எதிர் வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

- Advertisement -

மன்னார் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து குறித்த கட்டளையை பெற்றுள்ளதாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சுரேந்திரன் ரவல், அன்ரன் றொஜன் ஸ்ராலின்,வி.எஸ்.சிவகரன் மற்றும் அலக்ஸ் றொக்ஸ் ஆகிய 5 பேரூக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும எனக் கோரி வவுனியா நீதிவான் நீதிமன்றில் வவுனியா பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகளை தடைசெய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த விண்ணப்பம் இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz