மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!

- Advertisement -
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள இறக்குமதி மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுடன் இணங்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு ஆகியன இணைந்து இன்றையதினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018/19 காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கொடுக்கல் வாங்கல்களின் மூலம் 220 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தை இருப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தகம் என்பது ஒருவழிப்பாதை அல்ல எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தற்போது காணப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இலங்கை மற்றும் ஐரோப்பிய வர்த்தகங்கள் மற்றும் நேரடி அந்நிய முதலீடு ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிராந்தியந்தின் பொருளாதார மையமாக உருவாக வேண்டும் என்ற இலங்கையின் இலக்கை அடைய இது ஒரு தடையாக அமையும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமையின் காரணமாக மூலப்பெருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடையாக அமைந்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் இலங்கையின் ஏற்றுமதித் துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தை ஆதரிப்பதில் இருந்து விலகியிருக்க இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் நாட்டிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினரின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையிலான நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் ஆதரவு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சட்ட ரீதியான ஆட்சி மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை பராமரித்து செல்ல இது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz