2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வந்த நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
பொருளாதார நிபுணர் குழுவின் புலனாய்வு பிரிவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி Hong Kong, Zurich மற்றும் Paris ஆகிய நகரங்கள் இந்த ஆண்டில் செல்வந்த நகரங்கள் வரிசையில் பெயரிடப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த ஆண்டு Hong Kong, நகருக்கு இணையாக பட்டியலிடப்பட்டிருந்த Singapore மற்றும் Osaka ஆகிய நகரங்கள் தரவரிசையில் பின்தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் பணியாற்றிவந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறியுள்ளதன் காரணமாக சிங்கப்பூர் குறித்த பட்டியலில் பின்தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.