Dialog Axiata நிறுவனமானது, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் புதிதாக செயற்படும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உதவியுடன், Dialog Axiata நிறுவனமானது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக இதனை முன்னெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களை திறம்பட கையாள சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தீவிர சிகிச்சைப்பிரிவு, அதிநவீன உபகரணங்களுடன் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சி கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்களின் அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மேலும் தீவிர சிகிச்சையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது.