முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில் Colombo Kings அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில் Colombo Kings மற்றும் Kandy Tuskers அணிகள் மோதியிருந்தன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Colombo Kings அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Tuskers அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
Kandy Tuskers அணி சார்பில், Kusal Perera 87 ஓட்டங்களையும் Rahmanullah Gurbaz 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Colombo Kings அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
Colombo Kings அணி சார்பில் Dinesh Chandimal 80 ஓட்டங்களையும் Isuru Udana 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதனை அடுத்து வீசப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Kings அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
17 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Kandy Tuskers அணி 12 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக Dinesh Chandimal தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/6ln-kIzG93w