மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலவச உர விநியோகம் – புறக்கணிக்கப்படுவதாக வவுணத்தீவு விவசாயிகள் குற்றச்சாட்டு!

- Advertisement -

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இலவச உரத்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் நலன் கருதி அரசாங்கம் இலவசமாக உரத்தினை விநியோகம் செய்துள்ள நிலையில், அவற்றினை தாங்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அத்துடன், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கமநல சேவைகள் நிலையத்தின் ஊடாக  உரம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை ஒரு சிலருக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும்,  பெருமளவான விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாகவும்  விவசாயிகள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், உரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை 1 மணி முதல் மண்டபத்தடி கமநல சேவைகள் நிலையத்தின் முன்பாக வரிசையில் நிற்கின்ற போதிலும் தங்களால் உரத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரிய காலத்தில் குறித்த பசளைகளை விசிரா விட்டால் குறித்த விவசாய செய்கையில் பலனில்லையெனவும் விவசாயிகள் நட்டத்தினை அடையவேண்டுமெனவும்  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இன்றைய தினம் காலை உரத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில்  மண்டபத்தடி கமநல சேவைகள் நிலையத்தின் முன்பாக பெருமளவான விவசாயிகள் கூடி நின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் நிலையத்தின் உதவி பணிப்பாளர் கி.ஜெகநாதனை தொடர்புகொண்டபோது,

தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாகவே பசளைகள் பெறப்படுவதாகவும், குறைந்தளவிலான பசளைகளே கிடைத்துள்ள நிலையில் அவற்றினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன்,  இறக்குமதி செய்யப்பட்ட பசளைகள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும்,  அவை வெளிவரும் நிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த வேலைத்திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையுள்ளதாகவும், பசளை கிடைக்கும் பட்சத்தில்  இன்னும் ஓரிரு தினங்களில் நிலைமை சீர் செய்யப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் நிலையத்தின் உதவி பணிப்பாளர் கி.ஜெகநாதன் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz