முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
Jaffna Stallions அணி சார்பில் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய Thisara Perera, 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 97 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில், 219 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Dambulla Viiking அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.