மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 368 பேர் குணமடைவு!

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும்  368 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளில் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 204 பேர் விசேட அதிரடிப்படையினர் என கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்றையதினம் 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 534 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் 73 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 462 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 497 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 7 இலட்சத்து 13 ஆயிரத்து 652 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz