மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!

- Advertisement -

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, குறித்த சந்தேகநபர், பத்தரமுல்லைப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்,  இலங்கை உர நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றிடம் இருந்து, இலங்கை உர நிறுவனத்திற்கு திரவ உரங்களை கொள்வனவு செய்ததில், 90 மில்லியன் ரூபா நிதி, முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கடந்த 14 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz