மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனக பண்டாரவின் வழக்கு அரசியல் பழிவாங்கல் – பிரமித குற்றச்சாட்டு

- Advertisement -

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, முற்றிலும் அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிக்கின்றார்..

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவமொன்றுடன் தொடர்பில், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த குற்றப் பத்திரிகை சட்டத்திற்கு முரணாணது எனவும், அதனால் அது செல்லுபடியாகாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதிபதிகளினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவமொன்றுடன் தொடர்பில், 2015 ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கத்தினால் தனக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ரிட் மனுவின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப் பத்திரிகை, சட்டத்திற்கு முரணானது எனவும், அதனால் குற்றப்பத்திரிகையை செல்லுபடியற்றதாக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய, குறித்த குற்றப் பத்திரிகை செல்லுபடியாகாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், , குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் இதனைக் குறிப்பிட்டார்

“நிச்சயமாக இதுவொரு அரசியல் பழிவாங்கல் வழக்காகும்.

இவ்வாறான ஒரு வழக்கு இலங்கை வரலாற்றில் யாருக்கு எதிராகவும் இதுவரை தாக்கல் செய்யப்பட்டதில்லை.இது தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன.

ஒரே சம்பவத்திற்கு இரண்டு வழக்குகள் என்ற அடிப்படையில், எந்த நாட்டிலும் தாக்கல் செய்யப்படுவதில்லை.அத்துடன் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனை கைது செய்வதற்கு, விளக்கமறியல் உத்தரவு இருக்கவில்லை.

விளக்கமறியல் உத்தரவு இன்றியே, அவரைக் கைது செய்து சிறையில் வைத்தார்கள்.இதன்படி இந்த வழக்குடன் தொடர்புடைய நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எமக்கு நான்கு வருடங்கள் சென்றன”

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் விசேட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு, உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித பாரபட்சமும் இன்றி...

Developed by: SEOGlitz