மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேற்றைய நாளிலே மாத்திரம் 9 ஆயிரத்திற்கும் அதிகமான PCR பரிசோதனைகள்

- Advertisement -

குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 14 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நோயர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து, குறித்த வைத்தியநாலையின் வைத்தியர்கள் 14 பேர் உள்ளடங்களாக 53 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர், உடனடியாக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக் மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு வலையத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பணியாளர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு வலையத்திற்கு உட்ப்பட்ட பகுதியில் நேற்றைய தினத்தில் 33 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கட்டுநாயக்க முதலீட்டு வலையத்தில் தொடர்ந்தும் பலருக்கு PCR  பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா தொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்க்பட்டவர்கின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 475 ஆக காணப்படுகின்றது.

மேலும், 2 ஆயிரத்து 67 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், 255 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்க்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 513 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

நாட்டில் ஒரே நாளில் அதிகளவான PCR பரிசோதனைகள் நேற்றைய நாளிலேயே  முன்னெடுக்கபட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா தொற்றாளர்களை வேகமாக அடையாளம் காண்பதற்காக அதிக PCR பரிசோதனைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியிருந்தது.

இதன்படி, தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக அதிகளவான PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் இதுவரை 3 இலட்சத்து 83 ஆயிரத்து 961 PCR பரிசோதனைகள் முன்னடுக்கபட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம்: தயாசிறி ஜயசேகர கருத்து!

நாட்டின் தேசிய கொடி உள்ளிட்ட உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்ளுர் தயாரிப்புக்களான கைவினைப் பொருட்கள் ஆடை உற்பத்தி துறையினை...

Developed by: SEOGlitz