மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

- Advertisement -

கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள, சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 19 99 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த தொலைபேசி இலக்கத்தின ஊடாக, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏதேனும் ஒரு குடும்பத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டால், கொரோனா தொற்று ஏனையோருக்கு பரவுவதைத் தடுக்கும் வகையில், உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள நபர்கள், குறித்த துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவன் மூலம், உரிய நடவடிக்கைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

24 மணித்தியாலமும் இயங்கும்  19 99 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலும் ஆகிய மூன்று மொழிகளிவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

ஊரடங்கை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

Developed by: SEOGlitz