மெய்ப்பொருள் காண்பது அறிவு

இருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors!

- Advertisement -

முதல் முறையாக இடம்பெற்ற இராணுவத் தளபதியின் இருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors

இம்முறை முதற் தடவையாக இடம்பெற்ற இலங்கை இராணுவத் தளபதியின் இருபதுக்கு 20 லீக் போட்டித் தொடர் (Sri Lanka Army Commander’s T20), 2020 ஒக்டோபர் 17 ஆம் திகதி, தொம்பகொட SLAOC மைதானத்தில் நிறைவடைந்திருந்ததுடன், DIMO Southern Warriors அணி இதில் வெற்றிவாகை சூடியது.

- Advertisement -

Super Fashion Northern Warriors அணியை 9 ஓட்டங்களால் Southern Warriors வெற்றி கொண்டதுடன், மிகவும் சுவாரஸ்யமான இப் போட்டி முழுவதுமே இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு காணப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய  DIMO Southern Warriors அணி, தமது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. தமது வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய Super Fashion Northern Warriors அணியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

DIMO Southern Warriors  அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இத் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.  ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பித்திருந்த இந்தத் தொடரானது 12 போட்டிகளை கொண்டிருந்ததுடன், முதல் சுற்றில் 6 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்ற DIMO Southern Warriors   அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது.

இதன் பரிசு வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் இடம்பெற்றிருந்தது. இராணுவத் தளபதியின் இருபதுக்கு 20 லீக் முதலாவது போட்டித் தொடரானது இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவால் மிகவும் திறமையான வீரர்களைத் தெரிவு செய்து அவர்களை தேசிய மட்டத்திற்கு தயார் செய்யும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

மொத்தம் 16 தேசிய வீரர்கள் நான்கு அணிகளை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக அழைக்கப்பட்டதுடன், இது ஒவ்வொரு அணியின் அந்தஸ்தையும் பலப்படுத்தியது. இலங்கை இராணுவத்தின் இந்த முயற்சியை ஆதரிக்கும் முகமாக தினேஷ் சந்திமால் வழிநடத்தும் Southern Warriors  அணிக்கு அனுசரணையாளராக DIMO முன்வந்தது.

திரு. ரஞ்சித் பண்டிதகே (தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் – DIMO ) இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார். 2020 பருவகாலத்தில் இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியை வழிநடத்தும் பொறுப்பு மேஜர் தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவகாலத்தில் இராணுவ கிரிக்கெட்டை சிறப்பாக செயல்பட வைக்க இந்த பங்குடமையானது முக்கிய பங்கு வகிக்கிறது என்று DIMO நம்புகிறது.

இருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors! 1 இருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறைவேற்றுப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தினது பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் லீ சிங் மேயின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்எம் இன் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த, ஆதரவாக இருக்கின்ற...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : முகாமைத்துவப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமதி வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். எமது...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறுவனத் தலைவரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத் தலைவர் சதாசிவம் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைப் பெருமையுடன் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நாம்...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 32 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிசெயற்பட்ட மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர  காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா...

கெப்பிட்டல் எப்.எம் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் நிலையில், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் விதுர்ஷன் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமை...

Developed by: SEOGlitz