மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL வரலாற்றில் ஒரே நாளில் 3 சுப்பர் ஓவர்கள் பதிவானது!

- Advertisement -

IPL வரலாற்றில் ஒரே நாளில் 3 சுப்பர் ஓவர்கள் வீசப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற முதலாவது போட்டியான, Sunrisers Hyderabad அணிக்கு எதிரான போட்டியில், Kolkata Knight Riders அணி சுப்பர் ஓவர் முறை மூலம் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில், இரண்டாவது போட்டியான Mumbai Indians அணிக்கு எதிரான போட்டியில், Kings XI Punjab அணி, 2 சுப்பர் ஓவர்களுக்குப் பின்னர் தனது வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

இதன்படி, ஒரே நாளில் 3 சுப்பர் ஓவர்கள் வீசப்பட்டமை மற்றும் ஒரே போட்டியில் இரண்டு சுப்பர் ஓவர்கள் வீசப்பட்டமை ஆகிய நிகழ்வுகள் நேற்றைய தினத்திலேயே பதிவாகியிருந்தன.

நேற்றைய போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய Mumbai Indians அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Mumbai Indians அணி சார்பில், Quinton de Kock 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதனை அடுத்து, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Kings XI Punjab அணியும் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், போட்டியின் முடிவு சுப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

Kings XI Punjab அணி சார்பில், KL Rahul 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்த நிலையில், முதலாவது சுப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 5 ஓட்டங்களையே பெற்றுக் கொண்ட நிலையில், இரண்டாவது சுப்பர் ஓவரில் விளையாடுவதற்கு இரு அணியினரும் பணிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து, இரண்டாவது சுப்பர் ஓவரில், Chris Gayle மற்றும் Mayank Agarwal ஆகியோர் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி, Mumbai Indians அணிக்கு எதிரான இந்த போட்டியில், Kings XI Punjab அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

இதேவேளை, போட்டியின் சிறப்பாட்டக்காரராக, KL Rahul தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை!

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை  சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, பொலிஸ்  கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...

நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பிலான முழு விபரம் உள்ளே!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய  மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி,  கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து 488 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 78 பேரும்,...

கண்டி – அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71...

Developed by: SEOGlitz