மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் ஒரு இன அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை : தவராசா கலையரசன்!

- Advertisement -

தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு விடயமும் எமது மக்களின் கலாச்சாரத்தை கேள்விக்குறியாக்குகின்ற அடிப்படையிலேயே கையாளப்படுகின்றன.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது இன ரீதியான விகிதாசாரம் பின் நோக்கியே செல்கின்றது. அதிலும் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இவற்றிற்கான காரணம் யுத்த சூழலாக குறிப்பிட்டோம்.

இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து  எங்களுடைய கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாக்கின்ற விடையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய சனாதிபதியின் தொல்பொருள் செயலணி அதன் செயற்பாடுகளை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற எமது பூர்வீக நிலங்களை அத்துமீறி பிரவேசித்து கபளீகரம் செய்வதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

நாங்கள் இந்த நாட்டில் சமத்துவமாக சமாதானமாக வாழ்வதற்கான முழு சிந்தனையோடு செயற்படுகின்றோம். இந்த நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை.

ஏனைய இனங்களோடு சமாதானமாக வாழ்வே விரும்புகின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 186 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று...

20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பணம்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க்ப்பட்டுள்ளது. இதன்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

விசேட தேவைகளுக்காக அழைப்பு விடுக்கபட்டால் மாத்திரம் சேவை பெறுநர்களை அலுவலகத்திற்கு வருகை தருமாறு அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமது கோரிக்கைகள்...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே...

தம்பலகாமம் – இக்பால் நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையை கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் போது மாத்திரமே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டில் அதிகளவாக இருக்கின்றனர். இவ்வாறுதான் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம்...

Developed by: SEOGlitz