மெய்ப்பொருள் காண்பது அறிவு

வன்முறைகளுக்கு மத்தியில் கினியாவின் 10ஆவது ஜனாதிபதித் தேர்தல்!

- Advertisement -

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவின் 10ஆவது ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெற்றது.

கினியா நாடானது கடந்த பல மாதங்களாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகளினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

தற்போதைய ஜனாதிபதி Alpha Conde வுக்கு எதிராக பொதுமக்களினால் குறித்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கினியாவின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி Alpha Conde மற்றும் முன்னாள் பிரதமர் Cellou Dalein Diallo ஆகியோர் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போதைய ஜனாதிபதியான 82 வயதான Alpha Conde, மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக தன்னை தெரிவு செய்யுமாறு கோரி தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

கினியாவின் அரசியலமைப்பின் படி, ஒருவர் இரண்டு தடவை மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என வரையறுக்கப்பட்டிருந்தது.

எனினும், அண்மையில் கினியாவில் சர்ச்சைக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட அரசியலமைப்பு விதிகளின்படி, அவர் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz