மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

- Advertisement -

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமது பணியிடங்களுக்கு வருகை தருவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -

இதன்படி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமது பணியிடங்களுக்கு வருகை தருவதற்கு சொந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமது பணியிடங்களின் மூலம் வழங்கப்படும் போக்குவரத்து சேவையின் மூலமே பணிக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக, கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தமது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சிலர் குறித்த விசேட அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, தொழிலுக்குச் செல்லாமல் வேறு பிரதேசங்களுக்கு பயணித்துள்ளமை பொலிஸாரினால் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக, உயர் பொலிஸ் அதிகாரிகளினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து சேவையை பெற்றுக் கொடுக்குமாறு, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகில் வசிக்கும் தொழிலாளர்கள் தமது பணியிடங்களுக்கு நடந்துவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders – Kings XI Punjab இன்று பலப்பரீட்சை!

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் Sharjah சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதில்...

ஸ்பெயினில் தேசிய அவசரகால நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் தொற்றிப் பரவலின் இரண்டாவது அலையின் வீரியத்தை  கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயினில் தேசிய அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றில் இருந்து  இரவு 11 மணி முதல் இன்று காலை 6 மணி...

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

Developed by: SEOGlitz