மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகள்!

- Advertisement -

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த நடவடிக்கைகள், கொழும்பு மாநகர சபையினால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

திணைக்களம் மற்றும் அமைச்சின் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருதியும், ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்புக் கருதியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை, 24 மணித்தியாலமும்  தடையின்றி வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை வழங்கும் பிரிவு மற்றும் அரச வெளியீட்டு பணியகத்தின் அரசாங்க தகவல் திணைக்கள விற்பனை பிரிவு ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, குறித்த இரு பிரிவுகளும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம்: தயாசிறி ஜயசேகர கருத்து!

நாட்டின் தேசிய கொடி உள்ளிட்ட உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்ளுர் தயாரிப்புக்களான கைவினைப் பொருட்கள் ஆடை உற்பத்தி துறையினை...

Developed by: SEOGlitz