மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்கு தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை

- Advertisement -

மக்களுக்கு தரமான கடலுணவுகளை நியாயமான விலையில்  கிடைப்பதை உறுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் சுமார் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், அண்மையில்  இடம்பெற்ற வாழ்கை செலவை கட்டுப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

- Advertisement -

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு நிதி வழங்கப்படுமாயின், கடற்றொழிலாளர்களுக்கு அதிக கடலுணவு அறுவடை கிடைக்கும் காலப் பகுதியில், அவற்றை நியாயமான விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதன்படி, அவற்றைக் கொள்வனவு செய்து, களஞ்சியப்படுத்துவன் ஊடாக,  அறுவடை குறைந்த காலப்பகுதியில் அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக் கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே,  200 மில்லியன் ரூபா நிதியை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz