மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரியாஜ் பதியுதீன் குறித்து நீதிமன்றம் விடுத்துள்ள விசேட உத்தரவு!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்   மீண்டும் தாம்  கைது  செய்யப்படுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல்  செய்துள்ள  ரிட் மனு எதிர்வரும் 20 ஆம் திகதி  மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, மற்றும் அர்ஜூன ஒபேசேகர, ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

- Advertisement -

அவசர  தேவையின் அடிப்படையில் குறித்த மனுத்தாக்கல் செய்துள்ளதாக ரியாஜ் பதியுதீன் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ்  முஸ்தபா நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த மனுமீதான பரிசீலனையை  பிறிதொரு தினத்தில்  மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்தநிலையில் குறித்த மனு எதிர்வரும் 20 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி இளைஞர் ஒருவருக்கு பாரிய காயத்தை ஏற்படுத்தியமை...

ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதிப்புக்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குறித்த வழக்கு, சிசிர...

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20 ஆம் திருத்தத்தின் இராண்டாம் வாசிப்பு- முழு விபரம் உள்ளே!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு நீதியமைச்சர் அலிசப்ரியினால் இன்று காலை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இருபதாம் திருத்த...

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

Developed by: SEOGlitz