மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு!

- Advertisement -
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் குறித்த கடிதத்தின் பிரதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியின் நியமன உறுப்பினராக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுக்காற்று நடவடிக்கையால் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்புறுப்புரிமையிலிருந்தும் நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவாகிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட மயூரனது மாநகர சபை உறுப்புரிமையை நீக்குமாறும் கட்சி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்!

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

அரசியலமைப்பு  திருத்தத்தில்  சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...

சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களை   சவளக்கடை பொலிசார்  மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனையில் குறித்த மதுபானம் கைப்பற்றப்பட்டதாக...

Developed by: SEOGlitz