மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியலமைப்பு  திருத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

- Advertisement -

20 ஆவது அரசியலமைப்பு  திருத்த வரைபு தொடர்பாக  எதிர்வரும்  20 ஆம் திகதி நாடாளுமன்றில் ஐந்து நாள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெறவுள்ள  கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 22 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மிதான பரிசீலனைகள் உயர்நீதிமன்றில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் இடம்பெற்றது.

இந்த நிலையில், பரிசீலனைகள் குறித்த உயர்நீதிமன்றின் தீர்மானம் சபாநாயருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீதிமன்ற தீர்மானம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்!

வவுனியா, ஈரப்பெரியகுளம் பிரதேசத்தில் இரு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி நடவடிக்காக மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி கல், மண் என்பவற்றை ஏற்றிச் சென்ற...

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் நீக்கம் : யாழ். அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்க நடவடிக்கை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த...

புல்மோட்டை பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு!

திருகோணமலை  - புல்மோட்டை ஒட்டங்குளத்து சந்தியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியின் சில இடங்களில்,  சுற்றி வர அமைக்கப்பட்ட வேலிகளை காட்டு  யானை சேதமாக்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில்...

பிரித்தானியாவின் Wales பகுதி இரண்டு வார காலத்திற்கு முடக்கம்!

பிரித்தானியாவின் Wales பகுதி, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வரை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்...

தொழிற்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட அவதானம்!

தொழிற்சாலைகளில் சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில்,  முதலீட்டு சபை உன்னிப்பாக கண்காணிக்கும் என என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு...

Developed by: SEOGlitz