மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அக்கறையில்லை : உலக சுகாதார அமைப்பு!

- Advertisement -

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள்  அவசியம் என  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் மில்லியன் கணக்கான பொதுமக்கள் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை பிரான்ஸ் நாட்டின் பரீஸ் நகரில் பிரதான ஒன்பது இடங்களில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி தொற்றுக்குள்ளான 30 ஆயிரத்து 621 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் 88 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய பிரான்ஸில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து  9 ஆயிரத்து  684 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz