மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL தொடர் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி!

- Advertisement -

IPL தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு (Royal Challengers Bangalore) எதிரான நேற்றைய போட்டியில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (Kings XI Punjab) வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (Royal Challengers Bangalore), நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில், விராட் கோலி 48 ஓட்டங்களையும்,  கிறிஸ் மோரிஸ் (cris morris) 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

171 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி , 2 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில், ராகுல் (k.l.ragul) ஆட்டமிழக்காமல் 61  ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன் அடிப்படையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மேலும், போட்டியின் சிறந்த ஆட்ட வீரராக ராகுல் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

அரசியலமைப்பு  திருத்தத்தில்  சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...

சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களை   சவளக்கடை பொலிசார்  மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனையில் குறித்த மதுபானம் கைப்பற்றப்பட்டதாக...

யாழில் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுச்சந்தை வியாபாரிகளின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளது. தமது வியாபார நடவடிக்கையினை புறக்கணித்து, சந்தைக்கு முன்பாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது அலுவலக செய்தியாளர்...

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம்! விபரம் உள்ளே..

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட   பதுகம குடியிருப்பு பகுதி   தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா...

Developed by: SEOGlitz