மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் கவனயீனத்தால் மீண்டும் கொரோனா தொற்று : சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

- Advertisement -

அரசாங்கத்தின் கவனயீனம் காரணமாகவே, கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் வழமை போன்று தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, உரிய கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு, அரசாங்கம் இதுவரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0...

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகை!

கம்பஹா மாவட்டத்தில், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, இந்த நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்...

மஹவ – கெத்தக்கவ்வயில் அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மஹவ - கெத்தக்கவ்வ பிரதேசத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதாக குறிப்பிட்டு அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொது...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் Florida பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித்...

Developed by: SEOGlitz