மெய்ப்பொருள் காண்பது அறிவு

 ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் : ஊடக அமைப்புக்கள் சட்டத்தரணிகளிடம் விசேட கோரிக்கை!

- Advertisement -

முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில்  தாக்குதலாளிகள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது வடக்கு ஊடக அமைப்புக்கள் சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள் சிலர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் பணத்திற்காக சோரம் போனவர்களென சமூகம் எம்மை நகையாட அனுமதிக்கப்போவதில்லையெனவும் மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நோர்வே பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் முன்னணி சட்டத்தரணிகள் சிலரிடம்  குறித்த தாக்குதலாளிகள் பிணையில் விடுதலையாவதற்கு பல இலட்சம் பணத்தை செலவிட்டு பேரம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாகவே இன்று முல்லைதீவு நீதிமன்றில் வழக்கு தவணையின் போது குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கள் சார்பில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே வடக்கு ஊடக அமைப்புக்கள் இதே கோரிக்கையினை முன்னணி சட்டத்தரணிகளிடம் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

ரியாஜ் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!

தன்னை மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது...

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பூகொடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, மன்னார் பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இது தொடர்பில் தொடர்ந்தும்...

சர்ச்சைக்குள்ளான 20ஆவது திருத்தம் – மிக முக்கிய மாற்றங்கள் நீதி அமைச்சினால் முன்வைப்பு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு நீதியமைச்சர் அலிசப்ரியினால் தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கபட்டுள்ளது. இந்த நிலையில், 20...

Developed by: SEOGlitz