மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மாநகர சபையினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்கள்!

- Advertisement -

கொழும்பு மாநகர சபையினால் பொது மக்களுக்கு விசேட அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கொழும்பு மாநகர சபையின் ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை, கொழும்பு மாநகர சபையின் பிரதான கட்டிடத்திற்கு அருகில் உள்ள single window கருமபீடத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கொழும்பு மாநகர சபையின் பிரதான அலுவலத்திற்கு உள்நுழைவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வரிப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை, கொழும்பு நகரிலுள்ள இலங்கை மக்கள் வங்கி மற்றும் மக்கள் வங்கியின் அலுவலகங்களின் ஊடாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு,  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz