மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் : பிரதிப் பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள்!

- Advertisement -
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்போவதாக பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் இதுவரை அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதனால் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இவ்வாறான செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
அரசாங்க தகவல் திணைக்களம், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடாக வெளியிடப்படுகின்ற தகவல்களை மாத்திரம் கேட்டு, உண்மை பொய்களை அறிந்து கொள்ளுங்கள்” என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz