மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகளுக்கு நிவாரண விலை தொடர்பாக ஜனாதிபதி விசேட ஆலோசனை!

- Advertisement -

விவசாயிகளுக்கு அதிக லாபமும் நுகர்வோருக்கு நிவாரண விலையிலும் பொருட்கள் கிடைக்கப் பெறும் வகையில் சந்தையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள விவசாயிகள்  இடைத்தரகர்கள் இன்றி தமது பொருட்களை  விற்பனை செய்யும் நிலைமையை ஏற்படுத்துவதன் ஊடாக இதனை சாத்தியப்படுத்த முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

- Advertisement -

வாழ்கைச்செலவு குழு இன்று கூடிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியவசியப் பொருட்களை பற்றாக்குறையின்றி  மக்களிடம் சேர்ப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 50 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் புதிதாக தெங்கு செய்கையை ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்துள்ளார்.

பழங்கள்,மரக்கறி வகைகள் மற்றும் முட்டை ஆகியவற்றை நுகர்வோர் தேவைக்கு ஏற்ப பிரதேச மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக இதன் போது ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை கட்டியெழுப்பும் வகையில் வீட்டுத் தோட்டம் மற்றும் கோழிவளர்ப்பினை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் நெற்கொள்வனவினை மேற்கொள்வதற்கான திட்டங்களை தயாரிப்பதன் அவசியத்தை இதன் போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz