மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிய கிண்ணத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

- Advertisement -

எதிர்வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

முன்னதாக, ஆசிய கிண்ணத் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில், எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டின் பொருத்தமானதொரு காலப்பகுதியில் ஆசிய கிண்ணத் தொடரை நடாத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உத்தேசித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் நாடான ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 6 நாடுகளும் தகுதிகாண் நாடுகள் இரண்டு உட்பட மொத்தம் 8 நாடுகள் விளையாட தகுதி பெற்றிருந்தன.

இந்த நிலையில், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஆசிய கிண்ணத் தொடரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹவ – கெத்தக்கவ்வயில் அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மஹவ - கெத்தக்கவ்வ பிரதேசத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதாக குறிப்பிட்டு அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொது...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் Florida பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித்...

பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் மண்டபத்துக்கும் வருகை தந்துள்ளதாக தகவல்கள்...

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசு படலங்களின் அளவு சடுதியாக அதிகரித்துள்ளதாக...

ஹட்டனில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹட்டன் கொட்டகலை ட்ரேடன் தோட்டப்பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றிய மற்றும் அவருடன் தொடர்புவைத்திருந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகல வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் இருவரும்...

Developed by: SEOGlitz