மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியலமைப்பை விமர்சிப்பது மிலேச்சத்தனமான செயல் : டிலான் பெரேரா!

- Advertisement -

20 ஆவது திருத்தம் மிலேச்சதனமானது என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை வேடிக்கையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

“கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 20 ஆவது திருத்தம் என்பது  நாகரிகத்திலிருந்து மிலேசத்தனமான நிலைக்கு கொண்டு செல்லப்படுவதாக குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த சுவரொட்டிகளுக்கு நாம் பதில் வழங்க வேண்டும். 19 ஆவது திருத்தத்திற்கே அவர்கள் நாகரிகம் என்று கூறுகின்றார்கள். 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்ததன் பின்னரே இந்த நாட்டில் பட்டப்பகலில் மத்திய வங்கி கொள்ளை இடம்பெற்றது.

இது தான் நாகரிகம். உயிர்த்த ஞாயிறன்று ஒரே நேரத்தில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு உயிர்கள் இழக்கப்பட்டன.

இது நாகரிகம். எமது நாட்டு வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவுடன் ஒன்றாக இருந்து கொண்டு ஜெனீவாவில் இணை அனுசரணை வழங்குகின்றார்.

அரசியலமைப்பை மீறி எமது நாட்டு இராணுவத்தினருக்கு எதிராக வழக்குத் தொடர வெளிநாட்டு சட்டத்தரணிகளை நாட்டுக் கொண்டுவர முடியும் என்கின்றார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz