மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேசிய வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக கிளினிக் அடிப்படையில் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள், தேசிய வைத்தியசாலையின் விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ள முடியுடிமன தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, இருதய நோயாளர்கள் தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக, 0113618727 அல்லது 011 3618728 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நரம்பியல் நோய் சிகிச்சைகள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள 011 3618754 என்ற இலக்கத்திற்கும், தோல்நோய் தொடர்பாக 011 3618746 என்ற இலக்கத்திற்கும் அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் சில நோய்கள் தொடர்பான சிகிச்சை தகவல்களை பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ள வேண்டிய இலக்கங்களை அறிந்துக்கொள்ள எமது கெப்பிட்டல் நியுஸ் என்ற இணையத்தளத்தை பார்வையிடுங்கள்.

தேசிய வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 1 தேசிய வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz