மெய்ப்பொருள் காண்பது அறிவு

வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

- Advertisement -

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைபெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மலைநாட்டின் மேற்கு மலைசரிவுகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதிவரை குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், நீர்கொழும்பு முதல் புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக சில இடங்களில் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, பலாங்கொடை – பின்னவல வலவத்த தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக கடும் காற்று வீசிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வலவத்த தோட்டத்தைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஹட்டன் – டிக்கோயா பட்டலகெல்ல பகுதியில் பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த பகுதியில் நேற்று இரவு வீசிய கடும் காற்றுக்காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்தத்தில் காயமடைந்த பெண்ணொருவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், வீடுகளில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைமுதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்! விபரம் உள்ளே..

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை...

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz