மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீன் விவகாரம் : கணக்காளர் ஒருவர் கைது!

- Advertisement -

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்த விவகாரம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, இடம்பெயர் வாக்காளர்களை, புத்தளம் முதல் மன்னார் வரை அழைத்து செல்லும் செயற்திட்டத்தில் கணக்காளராக செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

குறித்த சந்தேகநபர், கிருலப்பனையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர் வாக்காளர்களை அழைத்து செல்வதற்காக இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான  221 பேருந்துகளை பயன்படுத்தி, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட இரண்டு பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, குறித்த சந்தேகநபரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதிப்புக்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குறித்த வழக்கு, சிசிர...

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20 ஆம் திருத்தத்தின் இராண்டாம் வாசிப்பு- முழு விபரம் உள்ளே!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு நீதியமைச்சர் அலிசப்ரியினால் இன்று காலை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இருபதாம் திருத்த...

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

Developed by: SEOGlitz