மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடுகளுக்கு இடையே பயணம் செய்வதற்கான பொதுவான நிபந்தனைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

- Advertisement -

நாடுகளுக்கு இடையே பயணம் செய்வதற்கான பொதுவான நிபந்தனைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

- Advertisement -

இதன் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாகக் காணப்படும் நாடுகள், பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும்போது அதற்கான நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உறுப்பு நாடொன்று, மற்றுமொரு உறுப்பு நாட்டில் அல்லது அதன் பிராந்தியத்தில் இருந்து வருகை தரும் பொதுமக்களுக்கு எதிராக பயணக்கட்டுப்பாடு விதிக்க வேண்டுமாயின் 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்துக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளை நான்கு வர்ணங்களின் அடிப்படையில் வகைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz