மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ரியாஜ் பதியுதீன் மனு தாக்கல்!

- Advertisement -

தான் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனினால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரியாஜ் பதியுதீன் குறித்த ரிட் மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளார்.

- Advertisement -

குறித்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக, பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்ஹ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பிரசன்ன டி அல்விஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மிஹிந்து அபேசிங்ஹ உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி தான் கைது செய்யப்பட்டதாக, மனுதாரரான ரியாஜ் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விளக்கமறியல் உத்தரவின் அடிப்படையில் தான் நீண்ட காலம் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக, ரியாஜ் பதியுதீன் மனுவில் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல் காரணங்களுக்காக தன்னைக் கைது செய்யுமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், தான் கைது செய்யப்படலாம் எனும் நியாயமான அச்சம் காணப்படுவதாகவும், ரியாஜ் பதியுதீன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தான் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, ரியாஜ் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz